Monday, October 7, 2024
Homeமிஸ்டரி வேர்ல்டுBhangarh Fort | Original Ghost Ride | பான்கர் பயங்கரம்

Bhangarh Fort | Original Ghost Ride | பான்கர் பயங்கரம்

Bhangarh Fort Story விடியும் வரை காத்திரு

(Bhangarh Fort Story) காலம் பல மர்மங்களை தனக்குள் வைத்துள்ளது. அதில் இன்றும் இருக்கும் ஒரு மர்மம் பான்கர் கோட்டை (Bhangarh Fort)

17 ஆம் நூற்றாண்டில் இராஜஸ்தானில் உள்ள பான்கர் கோட்டையின் ராஜபுத்திர இளவரசி ரத்னாவதி.அந்நூற்றாண்டின் இந்திய பேரழகி. பல போர்கலைகள் மட்டுமின்றி மாந்த்ரீக வித்தைகளையும் முழுமையாக கற்று தேர்ந்தவள்.

bhangarh fort

பல மன்னர்கள் இவள் அழகில் மயங்கி உள்ளனர். மக்களை நேசித்த இளவரசிகளில் இவளும் ஒருவள். அந்நாட்டு மக்கள் இவளை தெய்வமாக பார்த்தனர்.

ஆகசிறந்த அழகியாம், இப்படியாம் அப்படியாம் என இளவரசியின் மகத்துவங்கள் பற்றி சிங்கியா சேவ்ரா என்பவன் கேள்வி பட்டான். சிங்கியா சாதாரணமானவன் அல்ல மாந்த்ரீகத்தில் உச்சம் தொட்டவன். ஒருநாள் ரத்னாவதியை பார்த்தான் அழகில் மெய் மறந்தான். அவளை அடைய நினைத்தான்.

Bhangarh-Fort

சில நாட்களுக்கு பின் ரத்னாவதியின் பணிப்பெண் சந்தைக்கு வர அவள் பார்க்காத போது அந்த சிங்கியா அவள் வைத்திருந்த வாசனை திரவ குடுவைக்குள் மாயபொடியை தூவினான்.

அதை ரத்னாவதி தொட்டால் முகர்ந்தால் அவள் தன்னை மறந்து அந்த மந்திரவாதியை தேடி சென்று விடுவாள்.

அவள் மட்டும் அல்ல அந்த திரவியத்தை யார் தொடுகிறார்களோ அவர்களும் சிங்கியா மந்திரவாதியின் வசம்.

இதை தெரிந்துகொண்ட ரத்னாவதி அந்த திரவியத்தை வாங்கி மலை மேல் தூக்கி எறிந்தாள்(அது மலைக்கு மேல் அமைந்த கோட்டை) மலை மந்திரவாதி வசமாகி அவன் மேல் விழுந்து அவன் மூச்சை நிறுத்தியது. அதற்க்கு முன் அவன் அலறல் சத்தம் அந்த ஊரெங்கும் மரணஓலமாக ஒலித்தது. ஏய் ரத்னாவதி என்னை வீழ்த்திவிட்டதாக பெருமை கொள்ளாதே உன் வம்சம் இதோடு அழிய போகிறது நீயும் அழிய போகிறாய், நாளை விடியும்போது இந்த ஊரே இருக்காது என சாபமிட்டான். மக்கள் நடுங்கி போயினர். ரத்னாவதி திடுகிட்டாள். இரவோடு இரவாக மக்கள் அந்த ஊரை விட்டே சென்றனர்.

bhangarh-fort

விடியும் நேரம் அந்த திரவத்தின் வாசனை ஊரெங்கும் வீசியது. சிங்கியாவின் குரல் ஒலித்துகொண்டே இருந்தது. பான்கரில் வினோத சத்தங்கள், விடிந்தபோது பான்கர் நகரமே முற்றிலும் அழிந்துவிட்டது.

கோட்டைகள் இடிந்த நிலையில் இருந்தன. வீடுகள் இருந்த இடமே தெரியவில்லை. ஆனால் அந்த சாபம் கோவில்களை ஒன்றும் செய்யவில்லை.

இது நடந்தது 17 ஆம் நூற்றாண்டில் ஆனால் இன்றும் ராஜஸ்தான் மக்கள் அந்த ஊரில் சிங்கியா ஆவி இருப்பதாகவும்,மாலை 6 மணிக்கு மேல் அந்த கோட்டைக்கு செல்பவர்கள் உயிரோடு திரும்புவதில்லை என்றும் சொல்கிறார்கள். இன்று அரசாங்கமே இந்த பான்கர் நகரை சுற்றுலா தளமாக அறிவித்து விட்டது.

ஆனால் 6 மணிக்கு மேல் ஒரு ஆள் கூட அங்கே இருக்க கூடாது என எச்சரிக்கை பலகைகூட வைக்கப்பட்டு உள்ளது.

bhangarh-fort-rajasthan

வீம்பாக அங்கே இரவு யாருக்கும் தெரியாமல் இருந்த சிலரும் சிங்கியா ஆவியை பார்த்ததாகவும்…ஒரு வாசனை தங்களுக்கு நீண்ட நேரம் வந்துகொண்டு இருந்ததாகவும் சொன்னார்கள்.

அரசாங்கமே பயப்படும் இந்த விஷயம் கேள்வி பட்டதும் சுற்றுலா பயணிகள், ஆவி ஆராய்ச்சியாளர்கள் அதிகம் அங்கே வந்து செல்கின்றனர்.

(தைரியமான ஆளா இருந்தா போயிட்டு வாங்க. போறது முக்கியம் இல்ல 6 மணிக்கு மேல உள்ள இருக்கறதுதான் முக்கியம்.)

ஆனால் இது ஒரு சிறந்த சுற்றுலா தளம். வரலாற்று தளமாகவும் அமைந்துள்ளது.

மேலும் இதுபோன்ற தகவலுக்கு – Mystery, Travel 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments