சென்னையில் ஒரு அமானுஷ்ய கம்பெனி | haunted Office in Chennai | Tanglish News

haunted office in chennai, Based On True Event – சென்னையில் அமைந்துள்ள ஒரு தனியார் BPO கம்பெனியில் நடந்த ஒரு அமானூஷ்யமான உண்மை நிகழ்வை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

பாதுகாப்பு நோக்கத்தின் அடிப்படையில் அந்த கம்பெனி பெயரை இங்கே குறிப்பிடபோவதில்லை. ஆனால் சென்னையில் BPO-வில் வேலைசெய்யும் பலபேருக்கு இப்படி ஒரு BPO உள்ளதென்று நிச்சயமாக தெரியும்.

அவர்களின் பெயர் தாமோதரன் மற்றும் தேவா. தேவாவிற்கு ஆவி அமானுஷ்யம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு கொஞ்சம் அதிகம்.! தாமோதரனிற்கு அப்படி இல்லை. ஆனாலும் தேவா சொல்லும் சில அமானுஷ்யம்  சார்ந்த விஷயங்கள் அவனுக்கு பிடிக்கும்.!

அந்த நேரத்தில் தாங்கள் வேலை செய்யும் கம்பெனியின் கீழ் உள்ள கடைகளில் சிலர் அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவதுண்டு. அதை சற்று விரிவாக தேவா கேட்கிறான்.

அந்த கடைக்காரரும் தனக்கு தெரிந்த விஷயங்களை சொல்கிறார்.!

நான் இந்த கடைய ஆரம்பிச்ச புதுசு…இந்த கம்பெனி கட்ட ஆரம்பிச்சாங்க. நல்லாத்தான் போயிட்டு இருந்தது. திட்ர்னு கொஞ்ச நாள் வேலைய நிப்பட்டிடாங்க.

அப்போதான் தெரிஞ்சது அந்த கட்டிடத்துல 5வது  மாடிக்கும் 6வது மாடிக்கும் சிமெண்ட் தூக்கிட்டு போற  ஒரு பொண்ணு  அந்த இடத்துலயே தற்கொலை பண்ணிகிச்சாம்.  மொத்தம் 7 மாடி இந்த கம்பெனில ஆனா 5, 6 மாடி மட்டும் இன்னுமும் பாதியிலேயே இருக்காம்.

மேற்கொண்டு எந்த வேலையும் அங்க செய்யலையாம். இப்பவும் நைட் 11 மணிக்கு மேல அந்த 5வது  மாடிக்கும் 6வது மாடிக்கும் நடுவுல இருக்கற படிகட்டுல அந்த பொண்ணோட ஆவி உட்காந்து இருக்குமாம். சில பேர் அத பாத்துட்டு வேலையைவிட்டு போனதா கூட சொல்லி இருக்காங்க. என்று சொல்லி முடித்தார்.

மறுநாள் தேவா தாமோதரனிடம் இதுபற்றி சொல்ல. இருவரும் இது உண்மையா பொய்யா என பார்க்க நினைகின்றனர்.

அதற்க்கு மறுநாள் இருவருக்கும் இரவு நேர வேலை (NIGHT SHIFT) இரவு 11 மணிக்கு வெளியே வருகின்றனர்.! தேவா ஒரு கேமராவை கையில் வைத்துள்ளான். தாமு ஒரு  மொபைல்லில் வாய்ஸ் ரெகார்ட் on செய்கிறான்.

தாமுவை லிப்ட்டில் ஏழாவது மாடிக்கு வரசொல்லிவிட்டு தேவா படிக்கட்டு வழியாக செல்கிறான். முழுக்க முழுக்க இருட்டாகதான் இருந்தது . அந்த மாடியில் ஒரு லைட் கூட இல்லை.

கேமராவில்  சூட் செய்தபடியே மெல்ல மேலே ஒவ்வொரு படியாக ஏறிவருகிறான் தேவா.

அவன் மீது யாரோ ஒருவரது மூச்சுகாத்து படுவதுபோல் உள்ளது.  தாமு அந்நேரம் ஏழாவது மாடிக்கு சென்று விட்டான்.

தேவா மெல்ல 5வது மாடிக்கு வந்து சுற்றி சுற்றி சூட் செய்தான்.

அங்கிருந்த படிக்கெட்டில் யாரும் இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு துர்நாற்றம் மட்டும் அவனுக்கு வீசியது. சுற்றி ஒரு ஜன்னல் கூட இல்லை. அனால் காற்று அவன்மேல் வீசியது. மெல்ல அடுத்த மாடிக்கு வந்தான். அவன் பின்னாலேயே யாரோ வருவது போல் அவனுக்கு ஒரு பிரம்மை.

அடுத்த மாடியில் யாரோ நடக்கும் சப்தம்.! அந்த கும் இருட்டில் அவனுக்கு பக்கத்தில் ஏதோ நிற்ப்பதுபோன்ற உணர்வு. அங்கு உணர்ந்தான். பின்னாடி படிக்கட்டில் யாரோ அமர்ந்துள்ளனர்.!

கண்களை மூடிக்கொண்டு மெல்ல திரும்பி கண்களை திறந்தான். நிச்சயம் அங்கு யாரும் இல்லைதான். ஆனால் இருந்திருந்தால்? தைரியம் வரவைத்துகொண்டு மேலே ஏறினான்.! அவனோடு இன்னொரு படி ஏறும் சப்தம்.

அவனுக்கு தன்னை தவிர அங்கு யாரோ இருப்பதுபோல் தோன்ற வேகமாக ஏழாவது மாடிக்கு சென்றான்.

அங்கே தாமு அமர்ந்திருந்தான். உடனே கேமராவில் சூட் செய்த வீடியோவை பார்த்தனர்.

தூசி பறப்பது மட்டும் இருந்தது. வேறு ஏதும் அதில் இல்லை. ஆனால் வீடியோவில் உள்ள சவுண்ட் மட்டும் மாறுபடுவதை கேட்டனர்.! 5வது மாடிவரை ஒரு சவுண்டும் 5, 6 மாடிகளில் வேறு ஒரு சவுண்ட்ம் வருவதை கேட்டனர்.! அந்த சவுண்ட் யாரோ முனுமுனுப்பது போல் இருந்தது.

தேவா அதை கவனித்து கொண்டிருக்கையில் தாமுவின் கண்கள் வேறு எங்கோ பார்த்துகொண்டு இருந்தது. ! தேவா அங்க யாரோ நிக்கராங்கடா.! தேவாவும் பார்த்தான்…அந்த மாடியில் தூரத்தில் ஒரு மூலையில் ஒரு வெள்ளை உருவம். இருவரும் அருகே சென்று பார்த்தனர். அது வெள்ளை கோணிப்பை.

தேவா கீழ போய்டலாம்…எனக்கு எதோ தப்பா தெரியுது.! தேவாவும் சரி என்று இருவரும் அந்த இடத்தை விட்டு இரண்டடி எடுத்து வைத்தனர்.! லிப்ட் பக்கத்தில் இருந்த லைட் தானாக ஆப் ஆனது. இருவரும் படபடப்பாக லிப்ட் அருகே சென்றனர்.! லிப்ட் ஸ்விட்ச் அழுத்தினர்.!

அங்கு அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்தது. ஆம்,,,அங்கிருந்த சுவற்றில் அவர்களின் நிழல் தலை கீழாக நிற்பதுபோல் தெரிந்தது.!

தூரத்தில் இருந்த வெள்ளை கோணிப்பை இப்பொழுது அவர்கள் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்தது. அதை தேவா மட்டும் கவனித்தான். நிழல்லை பார்த்த பீதியில் லிப்ட் ஸ்விட்ச்சை வேகமாக அழுத்திகொண்டே இருந்தான் தாமு.

லிப்ட்’ ஓபன் ஆனது இருவரும் உள்ளே வந்தனர்.! கீழே வந்த லிப்ட்டில் திடீர் power Cut. அங்கிருந்த மைக்கில் தாமு  செக்யூரிட்டியை நிதானமாக அழைத்தான்.!

haunted office in chennai

தேவாவிற்கு மட்டும் தெரிந்தது. இந்த லிப்ட்டில் மூன்றாவதாக யாரோ உள்ளனர்.

power on ஆகி லிப்ட் கீழே போனது. ஆனால் FAN ஆப் ஆனது. சற்று நொடியில் லிப்ட் ஓபன் ஆனது. அது இரண்டாவது மாடி. வெளியே வந்தனர்…

அவர்கள் வெளியே வந்தவுடன் FAN சுற்ற ஆரம்பித்தது.! இருவரும் வெளியே சென்று அமர்ந்தனர்.!

தேவா நீ பாத்தியா லிப்ட்ல நம்மள தவிர யாரோ இருந்தாங்கடா…!

நானும் கவனிச்சேன். பிரம்மனு கூட வச்சிக்கலாம்..ஆனா அந்த தலைகீழ தெரிஞ்ச நிழல்.! அயோ…

யாரோ இருக்காங்க மேல. அந்த பொண்ணு உண்மையாவே நம்ம பக்கதுல இருந்து இருக்குமோ.

இருவரும் மேலே அண்ணாந்து பார்த்தனர்.! அந்த கம்பெனி அவர்களுக்கு புதிதாக தெரிய ஆரம்பித்தது..

(இது நடந்து கிட்டத்தட்ட 5, 6 வருடங்கள் ஆகி இருக்கும். இதை பற்றிய கதைகள் இன்னும் உலவிக்கொண்டு உள்ளது.

இதை உண்மையா என பார்க்க முயற்சி செய்த இருவருக்கும் ஏதும் ஆகவில்லை.ஆனால் நடந்து அவர்களுக்கு சற்று அமானுஷ்யமான ஒன்றாகத்தான் தெரிந்தது.)

ஆவி உண்மையா? பொய்யா என்ற ஆராய்ச்சிக்கு இப்பொழுது வர வேண்டாம்.! பயம் நம்மை எப்படி வேண்டுமானாலும் யோசிக்க வைக்கும்.!

NEXT

Leave a Comment