Monday, October 7, 2024
HomeசினிமாHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல! | Part 5 | Tanglish...

History of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல! | Part 5 | Tanglish News

History of Film ஐம்பதுகளின் துவக்கத்தில், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற எம். ஜி. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன் போன்றோரின் நட்சத்திர ஆதிக்கம் துவங்கியது.

அதன் ஆரம்ப அறிகுறிகளை அப்போது வந்த மதுரை வீரன், ரங்கோன் ராதா (1956) போன்ற படங்களில் காணலாம். இவ்விரு நடிகர்களும் தமிழ்த் திரைப்பட உலகில் ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலம் புகழின் உச்சியில் இருந்தனர். அவர்கள் நடிக்கும் படங்களின் இயக்குநரின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறைந்தது.

ஆண் நட்சத்திரங்களை சுற்றியே கதைகள் அமைக்கப்பட்டன. ஐம்பதுகளில் திரைப்பட உலகில் தாக்கம் ஏற்படுத்திய மற்றொருவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

1954இல் தொடங்கி 1959 வரை பதிபக்தி, பாசவலை போன்ற பல படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. இன்றளவும் அந்த பாடல்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன.

இவரது மறைவுக்குப் பின் கண்ணதாசன் பாடலாசிரியர் வரிசையில் முதலிடம் பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் நிகரற்று விளங்கினார்.

1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமான “மாடர்ன்” தியேட்டர்சாரின் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது.

ஆயினும் கருப்பு வெள்ளைப் படங்கள் அதிகம் இருந்தன , முற்றிலும் வண்ணப்படங்கள் மட்டுமே வர ஏறக்குறைய இருபதாண்டுகளாயின.

வண்ணத்திற்கு மாற்றம் வந்தவுடன் தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சியை வெகுவாக பாதித்தது. வண்ணப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிகர்கள் பல உடைகளை மாற்றுவதும், பல இடங்களில் ஒரு பாடலை படமாக்குவதும் வழக்கமாயிற்று.

இத்துடன் இசையின் தாக்கமும் சேர்ந்தமை, திரைப்படப்பாடல் காட்சிகளுக்கு ஒரு புதிய வடிவை ஏற்படுத்தியது. பின்னர், இசை விழாவின் வரவு இந்த பாடல் காட்சிகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1960ல் சென்னை அடையாறில் திரைப்படக் கல்லூரி நிறுவப்பட்டது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இந்தக் கல்லூரியில் பயின்றவர்களின் தாக்கத்தை காண முடிந்தது.

அறுபதுகளின் ஆரம்ப வருடங்களில் சில புதிய இயக்குநர்கள் தோன்றி தமிழ் திரைப்படத்திற்கு வலுவூட்டினார்கள். இதில் நினைவுக் கூறத்தக்கவர் ஸ்ரீதர்.

1959ல் வெளியான கல்யாணப்பரிசு படத்தின் மூலம் புகழ் பெற்ற இவர் நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), காதலிக்க நேரமில்லை (1964) போன்ற வெற்றிப் படங்களையும் தந்தார். முக்கோணக் காதல் கதை இவர் படங்களின் அடிப்படை.

History of Film இதே காலகட்டத்தில் தான் ஏ.பீம்சிங் கும் படங்களை இயக்கினார். பாவ மன்னிப்பு (1961), பார்த்தால் பசி தீரும் (1962) ஆகிய இவரது படைப்புகள் இன்றும் மங்காத புகழுடன் விளங்குகின்றன.

நிறுவனநாடகங்களில் வளர்ந்த கே. எஸ். கோபாலகிருஷ்ணன் கற்பகம் (1963) படத்தின் மூலம் இயக்குநரானார். உணர்ச்சி மிக்க குடும்பக்கதைகள் பல எடுத்து சில ஆண்டுகள் புகழோச்சினார்,

மேடை நாடக ஆசிரியராக திகழ்ந்த கே. பாலசந்தர், நீர்க்குமிழி (1965) படத்தின் மூலம் இயக்குனரானார். பல புதிய நடிகர்களை- கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட- இவர் அறிமுகப்படுத்தினார். இயக்குநரை குறிப்பிட்டு ஒரு படத்தை அடையாளம் காட்டும் சாத்தியம் பாலசந்தர் காலத்தில்தான் துவங்கியது.

1970- 1980 களில் நாட்டுபற்றை கொண்டு நடிக்கும் MGR படங்களும். குடும்பங்களை கவர்ந்த சிவாஜிகணேசன் படங்களும் தனது ஆதிகத்தை இந்த காலகட்டத்தில் சற்று மங்கி இருந்தன. ஆனாலும் அவர்களுக்கான ரசிகர்கள் வட்டம் சற்றும் குறையவில்லை.

ஜெயகாந்தனின் குறுநாவலான உன்னைப்போல் ஒருவன் அவராலேயே இயக்கப்பட்டு, 1964ல் படமாக வெளிவந்து, தேச அளவில் விருதைப் பெற்றது. இது யதார்த்த திரைப்படத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. நீர்க்குமிழி மூலம் திரையுலகில் பிரவேசித்த கே.பாலசந்தர், பல படங்களைத் தயாரித்து புகழீட்டினார்.

தொழில் சாரா நாடக மேடையிலிருந்து வந்த இவரது படைப்புகளின் முக்கிய அம்சங்கள் புதிய முகங்கள், நகர்ப்புற, மத்தியதர மக்களின் பிரச்சனைகள், கண்ணதாசன் பாடல்கள், மக்களிடம் முன்னமே வெற்றி பெற்றிருந்த நாடகங்கள் போன்றவையே,

இதே சமயம் பாவமன்னிப்பு (1961) போன்ற அகில இந்திய விருது பெற்ற படங்களை பீம்சிங் அளித்தார். இவரது படங்கள் வெற்றிபெற சிவாஜிகணேசன் போன்ற நட்சத்திரக் கூட்டமைப்பு, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை, குடும்ப உறவுகளைச் சார்ந்த கதைகள் போன்றனவே,

மற்ற மொழி பாடல்கள் காப்பி அடித்து சில படங்களில் வைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.! சில ஆங்கில கதைகள் கூட தமிழுக்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்டு பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டது.

ஏ.பி.நாகராஜன் சரஸ்வதி சபதம் (1966) போன்ற சில புராணப்படங்களை தயாரித்து கடவுளர்களையும், தேவர்களையும் வண்ணத்தில் காட்டினார். புராணப் படங்களுக்கு தமிழ் திரைப்படத்தில் சிறிது காலம் மறுவாழ்வு கிடைத்தது. 1963ல் மாநில அளவில் திரைப்பட விருதுகள் அமைக்கப்பட்டன. காவல்காரன் இவ்விருதைப் பெற்ற முதல் படம்.

NEXTPart 4

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments