லுடோ கிங்கின் 5 தந்திரங்கள் | How to win in Ludo King in Tamil | Download Free Purchased Ludo King Pack

Ludo King (லுடோ கிங்) என்பது தாயக்கரத்தின் நவீன பதிப்பாகும். அந்த காலத்துல அந்தபுரங்களிளும் அரண்மனைகளிலும் மட்டுமல்லாமம் கிராமத்து மக்களின் வீட்டு திண்ணையையும் அலங்கரதித்தது இன்னிக்கு நாம மொபைல்ல விளையாடற Ludo King.

என்னதான் அப்டேட் ஆனாலும் கூட இந்த கேம் இன்னிக்கும் நம்ம பாரம்பரிய விதிகளைத்தான் பின்பற்றுது. இந்த கொரான ஹாலிடேல இந்த கேம் ரொம்பவே பிரபலமாகிடுச்சு. இத ஆன்லைன்ல மட்டும் இல்லாம ஆஃப்லைன்லயும் விளயாடலாம்.

இது மிகவும் கணிக்க முடியாத விளையாட்டு. யாருக்கு எப்போ என்ன விழும்னே தெரியாது. அதுமட்டும் இல்லாம இதை ஹேக் செய்வது மிகவும் கடினம். ஆனால் இதுல சில ட்ரிக்ஸ் பண்ணி விளையாடலாம்.

அதாவது நீங்கள் எப்போதும் 4, 5 அல்லது 6 போன்ற அதிக எண்ணிக்கையிலான பகடைகளைப் பெறலாம்.

How to win in Ludo King: 5 Tips and Tricks

லுடோ கிங் விளையாட்டோட சில தந்திரங்கள இங்கே கொடுத்துருக்கோம்,  நீங்கள் உங்க விளையாட்டை சரியான முறையில் பயப்படுத்தினால், நீங்கள் ஒவ்வொரு ஆட்டத்தையும் வெல்லலாம்.

1. அனைத்து காய்களும் வெளியே எடுக்க வேண்டும்

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் உள்ள இருக்க எல்லா காய்களையும் வெளியே எடுத்துடனும். ஏனா நீங்கள் ஒன்று அல்லது இரண்டு காய்களில் மட்டும் கவனம் செலுத்தினா நகர்த்துவதர்க்கு உங்களிடம் குறைவான விருப்பங்கள்தான் இருக்கும், அதாவது இக்கட்டான கட்டங்களில் வேறு காய்களை நகர்த்த வழியில்லாமல் போகும். இதனால ஆட்டத்துல மோசமான பின்னடைவு ஏற்படும்.

2. ஒரு காயை மட்டும் இயக்க வேண்டாம்.

எல்லா நேரத்திலும் ஒரே ஒரு காயை மட்டும் இயக்காமல் இருப்பது நல்லது. உங்களுக்கு விழும் எண்களை எல்லா காய்களுக்கும் பிரித்து கொடுக்கணும். அதாவது ஒரு காய ஒரு இடத்துல மட்டும் ஓட விட்டு விரட்டி அடிக்கிறத விட 4 காய்களையும் நாலா பக்கமும் ஓடவிட்டு அடிக்கணும்.

3. எதிரியை விரைவில் கொல்லுங்கள்.

எவ்ளோ சீக்கரம் உங்க எதிரிய கொல்ல முடியுமோ அவ்ளோ சீக்கரம் கொன்னுடனும். நீங்க ஒரு வேளை பாய்ன்ட் நம்பர் 2 பாஃலோ பண்ணிங்கனா உங்களுக்கு இதற்கான வாய்ப்பு நிறையவே கிடைக்கும்.

4. பகடை உருட்டும் நேரத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.

லுடோ கிங்கின் வழிமுறையைப் புரிந்து கொண்டதாக யாரும் கூற முடியாது, ஆனால் பகடை வீசும் நேரத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதாவது நீங்கள் 4-5 முறை விரைவாக விளையாடியிருந்தால், அடுத்த வாய்ப்பில் பகடை உருட்ட உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

5. உங்கள் விளையாட்டை முடிவு செய்யுங்கள்

வெற்றிக்கு செல்வதற்கும் எதிராளியைக் கொல்வதற்கும் இரண்டு வழிகள் உள்ளன, நீங்க ஆட்டத்தை எப்படி ஆரம்பிக்க போறிங்கனு கேம் தொடங்குவதற்கு முன்பே இதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். நீங்க பல்வாய்தேவன் மாறி ஆக்ரோஷமாக ஆட முடிவு செய்தால்,  நீங்கள் எதிரியைக் கொல்ல வேண்டும். இல்லையெனில், நீங்கள் பாகுபலி போன்று பாதுகாப்பாக விளையாட விரும்பினால், நீங்கள் ஒரு பாதுகாப்பான விளையாட்டுக்குச் சென்று வெற்றியைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

 

மேலும் இதன் ப்ரீமியம் பேக்கை டவுன்லோட் செய்ய வேண்டுமா? இதோ இந்த தளத்தில் கிடைக்கும்.

 

Download Ludo King

 

Leave a Comment