இணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film

ஆபாவாணன் குழு அதிசயம் 

.என்றோ சிறு வயதில் ஒரு படம் நாம் அனைவரும் மறக்கமுடியாத காட்சிகளுடன் பார்த்திருப்போம். அடடா இவ்ளோ பிரம்மாண்டமான படமா இருக்கு என நண்பர்களிடமும் பேசி மகிழ்ந்திருப்போம்

அப்படி ஒரு படம்தான் “இணைந்த கைகள்” காலம் தொட்டு காணாமல் போன சில சினிமா காரர்களின் வரிசையில் இவருக்கு முதல் இடம் இருக்கும்.

திரு ஆபாவாணன். அவர்கள். 1990 காலகட்டத்தில் மறக்க முடியாத ஒரு படமாக வெளிவந்தது “ஊமைவிழிகள்”. சினிமா கல்லூரியில் படித்த பலபேர் சினிமாவில் இருந்தனர் வெறும் காட்சி பொருளாக மட்டும்.

காரணம் அவர்கள் எடுத்த படங்கள். வெறும் டாக்குமெண்டரி படங்களே எடுத்து வந்த அவர்களை சினிமா உலகம் தள்ளியே வைத்திருந்தது. இவர்களால் ஜனரஞ்சகமான படங்களை கொடுக்க முடியாது என.

இதற்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் ஆபாவாணன் குழு ஒரு முடிவு எடுத்தது. சினிமா கல்லூரியில் படித்து முடித்த மாணவர்களையும் படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களையும் ஒன்றாக இணைத்தது.

அதன் மூலம் ஒரு படம் அதுதான் “ஊமைவிழிகள்” கொய்யால யார்ரா இவனுங்க என சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு அந்த வருடம் நிகழ்ந்தது.

இப்பட வெற்றிக்கு முதல் காரணம் நடிகர் விஜயகாந்த் அவர்கள். கிளைமாக்ஸ் காட்சியில் எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து அனைத்து போலீஸ் வாகனங்களும் அணிவகுத்து வரும் அந்த காட்சி  பார்வையாளர்களை வாய் பிளக்க வைத்தது.

அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் பிற்காலத்தில் பெரிய இயக்குனர்களாக கருதப்பட்டனர். அதன் விளைவாக அதீத எதிர்ப்பார்ப்பில் வெளிவருகிறது ராம்கி, அருண்பாண்டியன் நடித்த “இணைந்த கைகள்”

முதல் சில நாட்கள் தியேட்டர் காலி. பின் அணிவகுத்தனர் மக்கள். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஒவ்வொரு திருவிழாவிலும், வீட்டிலும் ஒலித்துக்கொண்டே இருந்தது எனலாம்.

“அந்தி நேர தென்றல் காற்று” பாடல் இன்றுவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அருண்பாண்டியன், ராம்கி இருவரும் சினிமா கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ஒரே நேரத்தில் சினிமாவில் நுழைந்தனர்.

ஒருபக்கம், “சின்ன பூவே மெல்ல பேசு” “பறவைகள் பலவிதம்” “மருதுபாண்டி” “செந்தூரப்பூவே” என அடுத்த அடுத்த வெற்றிகளை குவித்து கொண்டிருந்தார் ராம்கி.

அதே நேரத்தில் “ஊமைவிழிகள்” ” படம் மூலம் வெற்றிகளை குவித்தார் அருண்பாண்டியன். இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்றதுமே அன்று எந்த நாயகர்களுக்கு இல்லாத எதிர்பார்ப்பு அவர்களின் படங்களுக்கு இருந்தது.

முக்கியமாக கல்லூரி ஆண்கள், பெண்கள் கூட்டம் நிச்சயம் இவர்கள் படத்திற்கு உண்டு. படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலையே கதை தொடங்கி விடுகிறது. கிட்டத்தட்ட அந்த ஆண்டு பெரிய செலவில் எடுக்கப்பட்ட படம் இணைந்த கைகள். இதே கதையை திரைக்கதைகூட மாற்றாமல் இன்று விஜய், அஜித் இருவரையும் நடிக்க வைக்க முடியும்.

இடைவேளை காட்சிக்காக மட்டுமே 100 நாட்கள் ஓடிய படம் என்ற பெருமை இதற்க்கு உண்டு. போஸ்டர் வெளிவந்து பெரிய அளவில் பேசப்பட்ட முதல் படம் இதுவே. இதற்க்கு பின் ஆபாவாணன் குழு. “பாலம்” “செந்தூரபாண்டி” “கருப்புரோஜா” போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தது.

ஏனோ அவர்களுக்கு கருப்புரோஜா தான் கடைசி படம். ராம்கி ஹீரோ. சொல்லவந்த கதை ஏனோதானோவென சொன்னதால் படம் சொதப்பிவிட்டது. ஆனால் பாடல்கள் ஹிட். ராம்கிக்காகவே படம் 50 நாட்கள் ஓடியது எனலாம்.

ராம்கி அறிமுகம் ஆகும் காட்சியில் வரும் பின்னணி இசை ரசிகர்களை கட்டிப்போட்டது. இப்படம் வெளிவந்தபோது ஊடகங்கள் இதை திட்டி தீர்த்தது எனலாம்.

இதற்க்கு பின் ஆபாவாணன் குழு சினிமாவை விட்டே ஒதுங்கியது. இவர்கள் கொடுத்த வெற்றியால் பல சினிமாக்கல்லூரி மாணவர்கள் தைரியமாக படம் எடுக்க தொடங்கினர். “RK செல்வமணியும் ஒருவர்.! அன்றைய காலகட்டத்தில் ஆபாவாணன் படத்திற்காக பலபேர் காத்துக்கிடந்த நிலை இருந்தது.

ஏனோ சினிமா உலகம் இவர்களை மறந்து விட்டது. ராம்கி, அருண்பாண்டியன் இருவரும் அதற்கு பின் பின்தள்ளப்பட்டனர். அருண்பாண்டியன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை வைத்தார்.

சில வருடம் சினிமாவை விட்டே ஒதுங்கிக்கொண்டார் ராம்கி. இன்று ராம்கி மீண்டும் நடிக்கவந்தாலும் அந்த பழைய Grace இன்று இல்லை. என்ன இருந்தாலும் ஆபாவாணன் குழு செய்தது மிக பெரிய சாதனைதான்.
திரும்பிப்பார்ப்போம் மீண்டும்.

Next

Leave a Comment