டைட்டானிக் அறியப்படாத மர்மம் | Mystery of Titanic

“Precognition” அப்டின்ற வார்த்தைய நீங்க யாராவது கேட்ருக்கீங்களா.? கேட்கலனாலும் அது உங்களுக்கு உள்ளதான் இருக்கு. That is “ஞான திருஷ்டி”  அதாவது முன்னறிதிறன்னு சொல்வாங்க.. என்னைக்காவது நீங்க  நான் அப்பவே நினைச்சேன் அது நடந்துடிச்சி என்றும். இது எனக்கு தோனிச்சிப்பா அப்டியே நடந்துடிச்சி. அப்டினும் சொல்லி இருப்போம்.

இதுதான் Precognition. பல வருடங்களுக்கு முன் சோக கடலில் மூழ்கி போன ஒன்று டைட்டானிக் கப்பல். 2500 பேர் உயிர பழிவாங்கின கோர சம்பவம். அது முன்னாடியே எழுதப்பட்டு இருக்குனா நீங்க நம்புவீங்களா?

1898 ஆண்டுல மார்கர் ராபர்ட்ஸன் அப்டிங்கற எழுத்தாளர்.ஒரு அதிசயமான நாவல் ஒண்ணு எழுதனாரு.

அது கற்பனையில உதிச்ச “கரு”ன்னு சொல்றத விட உள்ளுணர்வு சொன்ன கதை அப்டினே சொல்லலாம்.

அந்த கதையில 70,000 டன் எடைகொண்ட மிக பெரிய கப்பல் ஒண்ணு அட்லாண்டிக் கடலுக்கு வடக்குல ஒரு ஐஸ்கட்டியில மோதி மூழ்குது. 2500 பயணிகள் உயிரிழக்கறாங்க. இது எழுதனது 1898ல. சரியா 1912 ல அதாவது 14 வருஷத்துக்கு அப்புறம் ஏப்ரல் 14 ஆம் தேதி 66,000 டன் எடை கொண்ட டைட்டானிக் அப்டிங்கற கப்பல் அதே அட்லாண்டிக் கடலுக்குள்ள ஐஸ்கட்டி மோதி 1513 பேர் உயிர் விட்டாங்க. நாவலுக்கும் நிஜத்திற்கும் நூற்றுகணக்குல ஒற்றுமை இருந்தது. ராபர்ட்ஸன் அந்த கப்பலுக்கு வச்ச பேர் டைட்டன்.

ஆனா இப்படி ஒரு நாவல் எழுதப்பட்டு இருக்குனு தெரியாம லண்டன்ல ஒரு பத்திரிகையாளர் (டைட்டானிக் மூழ்கரத்துக்கு முன்னாடி)

நாளிதழ்ல அதே மாதிரி கற்பனையோட சிறுகதை ஒண்ணு எழுதனதுதான் மிகபெரிய விஷயம்.

சிறுகதையோட கடைசியில மிகபெரிய கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருவதால் “இது வெறும் கதையல்ல. நிஜமாக இப்படி நிகழும்” ன்னு எழுதனாரு.

இதுல என்ன ஒரு சோகம்னா டைட்டானிக் விபத்துல இவரும் தண்ணிக்குள்ள வைரத்த தேடி போய்ட்டாரு. எது எப்போ எப்படி நடக்கும்னு யாராலையும் யூகிக்கவே முடியாது. சில பேர் தன் மரணத்த தானே எழுதுவாங்க. அந்த பத்திரிக்கையாளர் அப்டி ஒருத்தர்.

ஒருசில பேருக்கு கப்பல் மூழ்கற மாதிரி கனவு வந்ததா கூட பதிவு பண்ணி இருக்காங்க. இதுக்கான விளக்கம் கற்பனை அப்டிங்கற ஒரு வரிலையே முடிஞ்சி போய்டுது.

ஆனா இந்த கப்பல் உலகம் முழுக்க பேசுபொருளாக மாறினதுதான் அதோட சிறப்பு. ஜாக், ரோஸ் மாதிரி உள்ள எத்தன Lovers இருந்தாங்களோ.

இது போன்ற தகவலுக்கு : Mystery

Leave a Comment