வெளியாது 66 தேசிய திரைப்பட விருது பட்டியல் | National Film Awards

இந்திய சினிமாவில் மிக மிக பெருமை மிக்க ஒரு விருதாக கருதப்படும் ஒன்று தேசிய திரைப்பட விருது.

65 வருடங்களாக பல நல்ல திரைப்படங்களுக்கும், நல்ல இயக்குனர்களுக்கும் விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் 66ஆவது தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களின் பட்டியல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடப்பது.

அதில் ஆயுஷ் குரானா மற்றும் விக்கி கௌசல் ஆகியோர் சிறந்த நடிகர்களுக்கான விருதை வென்றார்கள்.

நாடு முழுவதும் எந்த ஒரு மொழியிலும் எந்த வகையிலும் வெளியான படங்களை பாராட்டும் வகையில் இந்த அரசு 1954 ஆம் ஆண்டு கொண்டு வந்தது இந்த விருதை.

படம் வெற்றிபெற தகுதியுடைய முக்கியமான புள்ளி என்னவென்றால் அதை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎப்சி) சான்றிதழ் அளித்திருக்க வேண்டும்.

திரைப்படத்திற்கான தயாரிப்பாளர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். என்பது விழாவிற்கான விதி பட்டியல்.

அதேபோல் சில சமயம் வெளயாட்டு நிறுவனங்களால் இணைந்து தயாரிக்கப்படும் படங்கள் கூட தகுதி பெரும் வாய்ப்புண்டு.

இம்முறை வெற்றியாளர்களை தீர்மானிக்க நடுவர் மன்றத்தை அமைத்திருக்கிறது.

விருதுகள் மூன்று பிரிவுகளாக வழங்கபடுகின்றன. அதில் சிறந்த திரைப்படங்கள், சினிமாவில் சிறந்த எழுத்துக்கள் நிறைந்த திரைப்படங்கள், அம்சமில்லாத படங்கள் என பிரிக்கபடுகின்றன.

தாதாசாகேப் பால்கே விருதும் இந்த விழாவில் வழங்கபடுகிறது. இது இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் பெயருக்காக, பங்களிப்புக்காக ஒரு திரைப்பட ஆளுமைக்காக பாராட்டப்படும் விருது.

பெங்காலி திரைப்பட தயாரிப்பாளர் சத்யஜித்ரே மற்றும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறந்த இயக்குனர் விருதுகளை பல முறை பெற்றுள்ளனர்.

இதில் சத்யஜித்ரே தேசிய திரைப்பட விருதுகளில் அதிகபற்ற வெற்றிகளை பெற்றவராக திகழ்கிறார். பல்வேறு பிரிவுகளில் 32  வெற்றிகளை பெற்றுள்ளார்.

சிறந்த நடிகைக்கான விருதை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் வெளியான மகாநடி படத்திற்காக பெற்றுகொண்டார்.

பிவி ரோஹித் (கன்னடம்), சமீப் சிங் (பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரேஷி (உருது) மற்றும் ஸ்ரீனிவாஸ் பொக்காலே (மராத்தி) அனைவரும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருதை தட்டி சென்றனர்.

கன்னட திரைப்படமான கே.ஜி.எப் படம் சிறந்த ஸ்பெஷல் Effects விருதை வென்றது.

மேலும் மகாநடி படம் சிறந்த தெலுங்குபடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

மேலும் பல விருதுகள் இந்திய சினிமாவிற்கு கிடைக்க எங்கள் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

Next News

 

Leave a Comment