Tuesday, November 12, 2024
Homeஆண்கள் மட்டும்ஒரு ஆண் எந்த வயதில் வயதிற்க்கு வருகிறான்? அதன் அறிகுறிகள் என்ன?

ஒரு ஆண் எந்த வயதில் வயதிற்க்கு வருகிறான்? அதன் அறிகுறிகள் என்ன?

STRICTLY FOR MEN 

பருவமடைதல் அல்லது வயதுக்கு வருதல் என்றால் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு என்று தான் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண் குழந்தைகளும் வயதுக்கு வருகிறார்கள் என்பது தெரியுமா? பெண்கள் பூப்படையும் போது கொடுக்கும் முக்கியத்துவமும் ஆண் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. பொதுவாக 13–14 வயதில் ஆண் பிள்ளைகள் பருவ வயதை எட்டுகின்றனர்.இந்த வயதில் இரணடாம் பருவ மாற்றங்கள் நிகழும். குரலில் ஆண் தன்மை, தொண்டை குழல் வெளி வருதல், முகத்தில் முடி வளர்தல், முகப்பரு போன்ற அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு ஆண் பருவமடையும் போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு இருக்கும். இதனால் அவனது மார்பக திசுக்கள் 1 வருடம் அல்லது 2 வருடங்களுக்கு புடைக்க ஆரம்பிக்கும். சில ஆண் குழந்தைகளுக்கு இது வெளிப்படையாக தெரிவதும் உண்டு. இது தற்காலிகமான ஒன்று என்று உங்க மகன்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதிகமான மார்பக வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. ஹார்மோன் மாற்றத்தை தவிர வேறு பிரச்சினைகளின் அறிகுறியா என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மனநிலையில் மாற்றம் உண்டாதல்

ஹார்மோன் மாற்றங்களால் ஆண் குழந்தைகளும் மனநிலையில் மாற்றங்களை காண்பார்கள். உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான மாற்றங்களை அவர்கள் சந்திக்க நேரிடும். இதுவும் கடந்து போகும் என்று அவர்களுக்கு பொறுமையாக புரிய வையுங்கள்.

பொதுவாக ஆண் குழந்தைகள் சராசரியாக பருவமடைதல் 11 வயதில் ஆரம்பிக்கிறது. 9 வயதிலிருந்து 14 வயது வரை அவனது உடம்பில் மாற்றங்கள் உண்டாகின்றன. சில ஆண் குழந்தைகள் மற்ற ஆண் குழந்தைகளை விட சீக்கிரமே முதிர்ச்சி அடைகின்றனர். அவனது உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் சங்கடத்தை உண்டு பண்ணும். ஆண் குழந்தைகள் இதை மறைக்க முற்படுவார்கள். தனிப்பட்ட ஒரு விஷயமாக அவர்கள் நினைப்பார்கள்.

வெளிப்புற மாற்றம்

வெளிப்புறமாக உங்க குழந்தை வளர்ச்சி அடைவதை நீங்கள் காணலாம். உண்மையில் ஆண் குழந்தைகள் பருவமடையும் போது கை மற்றும் கால்களில் எடை போடும், 13.4 வயதில் அவனுடைய உயரம், தோள்கள் எல்லாம் விரிவடைய ஆரம்பிக்கும். தசைகள் எல்லாம் வளர்ந்து புஜங்களை கொண்டு வலிமையாக ஆரம்பிப்பான். இந்த கட்டுக்கோப்பான உடலமைப்பை உடற்பயிற்சி செய்வதன் மூலம் அவர்களால் பராமரிக்க முடியும். தோள்பட்டை முன்பை விட விரிவடைந்து காணப்படும். இடுப்பு தசைகள் வலிமை பெற ஆரம்பிக்கும். தோள்பட்டை, இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியின் தோல்கள் தடிமனாக ஆரம்பிக்கும். இந்த உடல் மாற்றங்களெல்லாம் ஏற்படுகிற பொழுது, ஆண் பருவமடைதலுக்குத் தயாராகிறான் என்று அர்த்தம்.

ஆண் குழந்தைகள் பருவமடைய ஆரம்பிக்கும் போது அதிக வியர்வை மற்றும் உடல் துர்நாற்றத்தை சந்திப்பார்கள். இதனால் அவர்கள் அடிக்கடி குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டியிருக்கும். முகத்தில் தாடி, மீசை வளர ஆரம்பிக்கும். ஷேவிங் செய்ய முற்படுவார்கள். பருவமடையும் போது சுரக்கும் ஹார்மோன்களால் தோலில் அதிக எண்ணெய் பசை சுரக்கும். இதனால் முகத்தில் முகப்பரு தோன்ற ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் அவர்களுக்கு சரும பராமரிப்பு அவசியமாகிறது.

முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும் சிலருக்கு கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் பருக்கள் அதிகம் உண்டாகும். சிறுவர்களுக்கு வியர்வை அதிகமாக வருவதென்பது, பருவ கால மாற்றம் மட்டுமல்ல, அவர்கள் பருவமடைவதற்கான அறிகுறியும் தான் என்பைதை உணருங்கள்.

பருவமடைதலின் முதல் அறிகுறியாக ஆண் குழந்தைகளின் ஆணுறுப்பு வளர்ச்சியடைய தொடங்கும். விந்தணுப்பை இவற்றில் இருமடங்கு வளர்ச்சி அதிகமாகும். அதே மாதிரி அந்தரங்க பகுதியில் முடிகள் வளரத் தொடங்கும். 1/3 பங்கு ஆண் குழந்தைகள் தங்களின் ஆண் குறிகளின் மீது சிறிய புடைப்புகள் அல்லது பருக்களை பெறுகின்றனர். இப்படி காணப்படுவது இயல்பானது இதனால் பாதிப்புகள் எதுவும் கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

விந்தணு உற்பத்தி

பருவம் அடைந்த ஒரு ஆணுக்கு அவனது உடல் விந்தணு உற்பத்திக்கு தயாராகிறது! சில நேரங்களில் நிறைந்த விந்துப்பையானது தானாகவே வெளியில் வருவதும் இயல்பான ஒன்று. எனவே யாரும் பயப்பட தேவையில்லை. இதுவும் பெண்களுக்கு மாதவிடாய் வருவதை போன்றுதான்.

மேலும் இரவு விந்தணுக்கள் வெளியேற்றம் மற்றும் விறைப்புத்தன்மை உண்டாக ஆரம்பிக்கும். இது சாதாரணமான ஒரு விஷயம். பாலியல் எண்ணம் இல்லாமல் கூட இந்த மாதிரி ஏற்படலாம். எனவே இது குறித்து உங்க ஆண் குழந்தைகள் பயப்பட வாய்ப்புள்ளது. இது ஒரு சாதாரண விஷயம் என்றும் பருவமடையும் போது இந்த மாதிரி மாற்றங்கள் உண்டாகும் என்பதையும் அவருக்கு தெரியப்படுத்தி உதவி செய்யலாம்.

ஆண் பருவமடையும் போது தன்னிச்சையான விறைப்புத்தன்மையும் உண்டாகும். இந்த விறைப்புத்தன்மை பிரச்சனை எந்த நேரத்திலும் உண்டாகலாம். இதை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் சில காலங்கள் கழித்து சரியாகி விடும் என்பதையும் அவருக்கு தெரியப்படுத்துங்கள்.

ஆண் குழந்தைகள் தங்களுடைய வயதுக்கு தகுந்த மாதிரி கீழ்க்கண்ட நிலைகளில் பருவமடைகின்றனர்.

பாலியல் முதிர்வு நிலை 1: இது தான் ஆரம்ப நிலை. இந்த நிலையில் ஆண் குறி குழந்தை பருவத்தில் காணப்பட்டதை போல் தான் காணப்படும். அந்தரங்க பகுதியிலும் முடிகள் எதுவும் இருக்காது

பாலியல் முதிர்வு நிலை 2 : 10 முதல் 15 வயது வரை

ஆண்குறி அளவில் மாறுபடும். அதன் அளவு வடிவம் எல்லாம் பெரிதாக ஆரம்பிக்கும். ஆண்குறியின் நுனி சிவந்து மெல்லியதாகவும் பெரியதாகவும் மாறும். ஒரு சில அந்தரங்க முடிகள் வளர ஆரம்பிக்கும்.

பாலியல் முதிர்வு நிலை 3:10 முதல் 16 வயது வரை

ஆண்குறி நீளமாகும். விந்தணுப்பை விரிவடையும். இப்பொழுது அந்தரங்க பகுதியில் அதிகமாக நீளமான கருப்பு நிற சுருண்ட முடிகள் வளரத் தொடங்கும்.

பாலியல் முதிர்வு நிலை 4 :12 முதல் 17 வயது வரை

ஆணுறுப்பு தொடர்ந்து வளர ஆரம்பிக்கும். நீளமாகவும் தடினமாகவும் வளர ஆரம்பிக்கும். விந்தணுப்பை பெரிதாகவும் அந்தரங்க பகுதியில் முடிகளும் நிறைய வளரத் துவங்கும். நம் தலையில் இருக்கும் முடியைப் போல அந்தரங்க பகுதியில் முடிகள் வளர்ந்து சுருண்டு போய் இருக்கும்.

பாலியல் முதிர்வு நிலை 5 :

விந்தணுக்கள் அளவு 20 மி. லி ஆக அதிகரித்து இருக்கும். விந்தணுப்பை ஆணுறுப்பு எல்லாம் பெரியவர்கள் போல மாற்றம் பெற்றிருக்கும். வயது வந்தோர் மாதிரி அந்தரங்க முடிகள் காணப்படும்.

 

இதைவிட அதிகமாக கவனிக்கத்தக்கது உளவியல் ரீதியான மாற்றங்கள் தான். பெற்றொரிடம் இருந்து ஒதுங்கி இருத்தல், அடிக்கடி கோபம், சோகம், மகிழ்ச்சி என உணர்ச்சி மாற்றம், தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்று நினைப்பது, மற்றவர்களை கவரும் வண்ணம் உடை, தலைமுடி ஒப்பனை செய்வது, தனக்கென தனிப்பட்ட இடத்தை ஒதுக்கி கொள்வது போன்ற மாற்றங்கள் வரும்போது பெற்றோர், குறிப்பாக தந்தை பருவ மாற்றத்தை உணர்ந்து ஆண்பிள்ளைகள் அதை சரியாக கடந்து வர வழிகாட்டி உதவ வேண்டும்

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments