Wednesday, February 12, 2025
Homeசினிமாடாக்குமெண்டரிஏழு ஜென்மங்கள் உண்மையா பொய்யா? | அறிவுக்கு அப்பால் | Season 1

ஏழு ஜென்மங்கள் உண்மையா பொய்யா? | அறிவுக்கு அப்பால் | Season 1

அறிவுக்கு அப்பால்

ஏழாவது ஜென்மம்…| ஏழு ஜென்மங்கள் உண்மையா பொய்யா:

வணக்கம் வாசகர்களே..! சினிமா பற்றிய பல தகவல்களை சினிமா Untold Story Season 1 மற்றும் Season 2 வில் படித்திருந்தோம்….அதற்க்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி…!

அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் உள்ள பல அறிவுக்கு எட்டாத மர்மங்கள் மற்றும் அதிசயங்கள் பற்றி ஒரு தொடர் கட்டுரை இனி உங்களுக்காக வர உள்ளது….!

ஒவ்வொரு மனிதனின் பிறப்பிற்கு பின்னால் ஏதோ ஒரு சொல்லப்படாத மர்மம் இருந்துகொண்டே இருக்கும். அப்படி ஒன்றுதான் ஏழாவது ஜென்மம் என்பது. இதுவரை ஏழாவது ஜென்மம் பற்றி பல கருத்துகள் சொல்லபடுவதுண்டு!

மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் அடுத்தடுத்த ஜென்மங்கள் என்பது உண்டு. சரி இது உண்மையா பொய்யா என்பது பற்றி சற்று தெளிவாக பாப்போம் (கார்ட்டூன் மதன் பாணியில் எச்சரிக்கை – மூடநம்பிக்கை உள்ளவர்கள் இதை படிக்க வேண்டாம்…..)

ஏழு ஜென்மங்கள் உண்மையா பொய்யா

அவ்வபோது நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டு இருப்போம்….ஒரு சிறுவன் தனது முன்ஜென்மதில் சந்தித்த  நபர்களை பற்றி அல்லது வாழ்ந்த இடம் பற்றி சொல்கிறான்…அது உண்மையாக நிருபிக்கப்பட்டுள்ளது என்று.! இப்படி பல நாட்டில் செய்தி உள்ளது. அது எப்படி? அதற்க்கு மூன்று வாய்ப்பு உள்ளது.

ஒன்று : அந்த சிறுவன் வளர்ந்து வரும் பருவத்தில் யாராவது அந்த நபர்கள் பற்றி அந்த இடம் பற்றி சொல்லி அது அவன் மனதில் ஆழ பதிந்திருக்க வேண்டும்…சில நாட்களுக்கு பின் அவை உண்மைதான் என்று அவன் மூளை ஒரு பிம்பத்தை அவனுக்கு கொடுத்திருக்க வேண்டும்.

இரண்டு : அவன் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல் நினைத்துக்கொண்டு தான் சொல்வது பொய் என தெரிந்தும் அதை உண்மை என நம்ப வைப்பது..!

மூன்று : உண்மையாகவே அவன் மறுபிறவி எடுத்து வந்து இழந்த நினைவுகளை பெறுவது.!

இந்த மூன்றில் ஒன்று நிரூபிக்க பட்டாலும் அதுவே அறிவியலின் அடுத்த சாதனையாக இருக்கும்.

ஏழு ஜென்மங்கள் உண்மையா பொய்யா? :

கி.பி 1367 ஆம் காலகட்டத்தில் எகிப்து நாகரிகத்தில் ஆரம்பிக்கப்பட்டது இந்த ஜென்ம விளையாட்டு.! தற்போது நாம் மம்மி என்று அழைக்கும் பதப்படுத்தப்பட்ட உடல்கள் மறுஜென்மம் எடுக்காமல் இருக்க கொண்டு வரப்பட்ட ஒரு சம்பர்தாயம்.! இப்போதும் கூட பல பிரமீடுகளில் அதை பற்றிய குறிப்புகளையும் கல்வெட்டுகளையும் காணலாம்.! நம்பிக்கையாக எழுதப்பட்ட அது இன்றும் அம்மக்களின் வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Hinduism, Buddhism. Jainisam, மற்றும்  எல்லா மதங்களிலும் இந்த நம்பிக்கை என்பது இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.! அதாவது இறந்த ஆன்மா சொர்க்கம் அல்லது நரகத்திற்கு சென்று அதற்கான தண்டனைக்காலம் முடிந்த பிறகு மீண்டும் இன்னொரு உடலை தேடி பிடித்து மீண்டும் பிறக்கும் என்பதே இதன் இத்யாதி இத்யாதி கிளைமாக்ஸ்.!

சரி சடங்கு சம்பர்தாயம் ஒரு பக்கம் இருக்கட்டும்.! ஒரு வேலை மறுஜென்மம் இருப்பதாக வைத்துகொள்வோம் அது ஏன் சிலருக்கு மட்டும் நினைவுக்கு வருகிறது.,

ஏன் சிலருக்கு மட்டும் முன் ஜென்மம் சார்த்த நிகழ்வுகள் நடக்கிறது.! முன்பே சொன்னது போல் எங்கோ கேட்ட சில விஷயங்கள் நம் subconscious mind ல் நமக்கே தெரியாமல் பதிந்து கிடக்கும் அவை நமையும் மீறி வெளியே வரும்போது அவை முன்ஜென்மம் என்று கணிக்க படுகிறது எனபது சில அறிவியலாளர்களின் தியரி.

ஏழு ஜென்மங்கள் உண்மையா பொய்யா

அமெரிக்க மாகணத்தில் ஒரு பல்கலைகழகத்தில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.! அதில் மரணத்தின் இறுதி தருவாயில் இருப்பவர்கள் மற்றும் நோய்வாய் பட்ட சிலர், மரணத்தில் இருந்து மீண்டு வந்தவர்கள்! அவர்களின் சிலர் இதைதான் கூறினார்

“நான் இறந்துவிட்டதாக கூறினார்கள் அது என் காதில் விழுந்தது….நான் இங்கேதான் இருந்தேன் எங்கும் செல்லவில்லை” என்று.! அதாவது ஆன்மாக்கள் ஒரு உடல்விட்டு இன்னொரு உடல் தேடி போகும்,

ஆனால் சிலர் இதற்க்கு நேர்மாறாக  ஆன்மா என்பதே இல்லை அவை வெறும் காற்றுதான் என்று, தவிர மறு ஜென்மம் முன் ஜென்மத்திற்கு இடமில்லை என்பது அவர்களின் கூற்று.!

ஒரு வேலை ஆன்மா இருந்தால் அவை ஒரு உடல் விட்டு இன்னொரு உடல் போகுமாயின் நினைவுகள் இருக்குமா? இல்லையா? அது விடையில்லா கேள்வி.!

முன் ஜென்மம் மறுஜென்மம், ஏழு ஜென்மம் உண்மை என்பதற்கும் ஆதாரம் இல்லை பொய் என்பதற்கும் ஆதாரம் இல்லை…! சில சித்தர்கள் செய்யும் கூடுவிட்டு கூடுபாயும் (ஒரு உடல் விட்டு இன்னொரு உடல்-பரகாய பிரவேசம்) வித்தை இதில் அடங்குமா என்பது கேள்விகுறி.

ஒரு வேலை ஏழு ஜென்மம் இருந்தால் இதுவே நமது கடைசி ஜென்மமாக இருக்கட்டும் – மீண்டும் சந்திப்போம்

Next

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments